dinamalar telegram
Advertisement

புற்று மாரியம்மன் கோவிலில் 17ம் ஆண்டு பால்குட ஊர்வலம்

குளித்தலை அடுத்த, திம்மம்பட்டி பஞ்., கணக்கப்பிள்ளையூர் அம்மன் நகரில், மண்மேடு புற்று மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 17ம் ஆண்டு பால்குட திருவிழா நடந்தது.
இதில், உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து வந்த பக்தர்கள், குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றிலிருந்து, 1,008 அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் ஊர்வலமாக வந்தனர். பின், கோவிலை வந்தடைந்த பின், அம்மனுக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை மற்றும் ஆராதனை நடந்தது.
திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, வேண்டுதலை நிறைவேற்றி, சுவாமியை வழிபட்டு சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement