dinamalar telegram
Advertisement

கள் தடையை நீக்க கோரி சென்னையில் வரும் 16ல் அசுவமேத யாகம் அறிவிப்பு

''சென்னையில் கள் மீதான தடையை நீக்க கோரி வரும், 16ல் அசுவமேத யாகம் நடத்தப்படும்,'' என, கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார்.
கரூரில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

கள்ளில் போதைக்கு காரணமான, 'ஆல்கஹால்' அளவு வெறும், 4.5 சதவீதம் மட்டுமே உள்ளது. ஆனால், டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களில், 42.8 சதவீதம், 'ஆல்கஹால்' உள்ளது. இந்த புரிதல் பொதுமக்களிடம் இருந்திருந்தால், தமிழகத்தில் கள்ளுக்கு தடை வந்திருக்காது.
நாட்டில் எந்த மாநிலத்திலும் கள்ளுக்கு தடை இல்லை. ஆனால், தமிழகத்தில், 33 ஆண்டுகளாக கள்ளுக்கு தடை உள்ளது. இது தமிழக மக்கள் கொண்டிருக்கும், அறியாமையின் வெளிப்பாடே ஆகும். கள் பற்றிய புரிதலை தமிழகத்தில் விதைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வரும், 16 காலை, 10:00 மணிக்கு, சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில், அசுவமேத யாகம் நடத்தப்படும். அப்போது, கள் தடுத்து நிறுத்த வேண்டிய போதை பொருள் என, நிரூபிப் போருக்கு, 10 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement