dinamalar telegram
Advertisement

பைக்குகள் நேருக்குநேர் மோதி விபத்து: இரண்டு பேர் பலி

குளித்தலை அடுத்த, கழுகூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா, 35; ஆடு வியாபாரி. இவர், நேற்று மாலை, 'ஹீரோ ஸ்பிளண்டர்' பைக்கில் இனுங்கூருக்கு சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, பெட்டவாய்த்தலை - இனுங்கூர் நெடுஞ்சாலை, பங்களாப்புதுார் பால் சொசைட்டி அருகே, திருச்சி மாவட்டம், சிறுகமணியை சேர்ந்த சதீஷ், 32, என்பவர், பழங்காவேரியை சேர்ந்த ரமேஷ், 32, என்பவரை அமர வைத்துக்கொண்டு ஓட்டி வந்த பைக், கருப்பையா பைக் மீது நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. அதில், கருப்பையா சம்பவ இடத்திலேயே பலியானார்.

படுகாயமடைந்த சதீஷ் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரையும் மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே சதீஷ் உயிரிழந்தார். ரமேஷ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். கருப்பையாவுக்கு, அமுதா என்ற மனைவியும், சந்தியா, 10, மாலதி, 7, இரண்டு மகள் உள்ளனர்.
இதுகுறித்து, குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement