dinamalar telegram
Advertisement

மக்கள் நீதிமன்றத்தில் 1,262 வழக்குகள் தீர்வு

கரூர் மற்றும் குளித்தலையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில், 1,262 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், நாடு முழுவதும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மக்கள் நீதிமன்றம் நடந்து வருகிறது. நேற்று கரூர் மற்றும் குளித்தலை நீதிமன்றங்களில், மக்கள் நீதிமன்றம் நடந்தது.

அதில், வங்கி சிவில் வழக்குகள், காசோலை வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள் உள்பட, பல வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இறுதியாக, 1,262 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு, 18 கோடியே, ஐந்து லட்சத்து, 25 ஆயிரத்து, 489 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது.
கரூரில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான பாக்கியம் மற்றும் வக்கீல்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement