dinamalar telegram
Advertisement

முதல் டோஸ் போடாத 1.58 லட்சம் பேர்

ஈரோடு மாவட்டத்தில் இன்னும் முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்தாமல், 1.58 லட்சம் பேர் உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில், 23 லட்சத்து, 77 ஆயிரத்து, 315 பேர் வசிக்கின்றனர். இதில், 16 லட்சத்து, 51 ஆயிரத்து, 198 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இவர்களில், 14 லட்சத்து, 91 ஆயிரத்து, 127 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். ஆனால், ஒரு லட்சத்து, 57,902 பேர் இதுவரை முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்தி கொள்ளவில்லை. இதேபோல் இரண்டு லட்சத்து, 41 ஆயிரத்து, 531 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை. இதுவரை ஒரு லட்சத்து, 16,704 பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement