dinamalar telegram
Advertisement

நிலத்தடி நீரை உயர்த்த நடவடிக்கை; அமைச்சர் நேரு

உள்ளாட்சி வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில், ஈரோட்டில் நேற்று நடந்தது. அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு பேசியதாவது: மக்களின் தேவை, உள்ளாட்சிகள் கேட்கும் திட்டங்களை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

உள்ளாட்சி பகுதியில் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதுடன், அனைத்து பகுதிகளுக்கும் மழை நீர் வடிகால், கழிவு நீர் ஓடைகள் அமைத்து, ஏரி, குளங்களை மேம்படுத்தி, நிலத்தடி நீரை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பல்வேறு இடங்களில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்கவும் முனைப்பு காட்ட வேண்டும்.
கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்துக்கு, 1,000 கோடி ரூபாய், நமக்கு நாமே திட்டத்துக்கு, 400 கோடி ரூபாய், சிறப்பு நிதியாக சென்னை மாநகராட்சிக்கு, 890 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement