dinamalar telegram
Advertisement

மாநகரில் கடைகள் முன் பறந்த தேசியக்கொடிகள்

நாட்டின், 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், வீடு, கடை, அலுவலகங்கள், கோவில், தொழிற்சாலைகளில், ஆக.,13ம் தேதி முதல், 15ம் தேதி வரை தேசியக்கொடியை பறக்க விடுமாறு, பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதன்படி உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், மக்களுக்கு இலவசமாக தேசியக்கொடி வினியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில், ௧௩ம் தேதியான நேற்று, ஈரோடு மாநகரில் கடைகள் முன் தேசியக்கொடியை, வியாபாரிகள் பறக்க விட்டனர். கடை முன் சிறு குச்சியில் தேசியக்கொடியை கட்டியிருந்தனர்.
குறிப்பாக ஈரோடு புது மஜீத் வீதி, கொங்காலம்மன் கோவில் வீதிகளில், தேசியக்கொடியை அதிகம் காண முடிந்தது. இதேபோல் வீடுகளிலும், மக்கள் தேசியக்கொடியை பறக்க விட்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement