dinamalar telegram
Advertisement

அரசு கூடுதல் தலைமை செயலர் ஆய்வு

ஈரோட்டில் பல்வேறு வளர்ச்சி பணிகளை, நகராட்சி நிர்வாக கூடுதல் தலைமை செயலர் சிவதாஸ் மீனா, குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குனர் தட்சிணாமூர்த்தி, நேற்று ஆய்வு செய்தனர்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலர் சிவதாஸ் மீனா, இயக்குனர் பொன்னையா, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆகியோர், காந்திஜி சாலை, காளை மாட்டு சிலை அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், 25 கோடி ரூபாயில் கட்டப்பட்ட, வணிக வளாகத்தை ஆய்வு செய்தனர். அங்குள்ள வசதிகள், லிப்ட், சந்தைக்கான இடம், சுகாதார வசதிகளை கேட்டறிந்தார்.

பின், சோலார் பகுதியில், 20 ஏக்கரில் அமைய உள்ள புது பஸ் ஸ்டாண்ட் பணி, 11.40 ஏக்கரில், கட்டப்பட்டு வரும் மத்திய பேருந்து நிலையம், வைராபாளையம் நுண்ணுயிரி உரக்கூடம், திடக்கழிவு, எரியூட்டும் கிடங்கை ஆய்வு செய்தனர்.
குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, கோபி, நம்பியூர் யூனியன் பகுதியில், ஊரக குடியிருப்புகளுக்கான ஜல்ஜீவன் மிஷன் திட்டப்
பணிகளை ஆய்வு செய்தார்.
அளுக்குளி பஞ்.,ல் மூலவாய்க்கால் நீருந்து நிலையம், குருமந்துார் பஞ்.,ல் குறவர் காலனி மேல்நிலை தொட்டி, குடிநீர் இணைப்புக்கான சோதனை ஓட்டப்பணிகளை ஆய்வு செய்தார். கூடுதல் கலெக்டர் மதுபாலன், டவுன் பஞ்., துறை ஆணையர் செல்வராஜ் உட்பட பலர்
பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement