dinamalar telegram
Advertisement

சுதந்திர தின கலை நிகழ்ச்சியில் அரசு பள்ளிகள் புறக்கணிப்பு?

நாட்டின், 75வது சுதந்திர தின விழா, நாளை நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில், ஈரோடு வ.உ.சி., பூங்கா மைதானத்தில் கொடியேற்றப்படுகிறது. இதற்காக பூங்கா மைதானத்தில் விழா பந்தல் மற்றும் மேடை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணி துரித கதியில் நடந்து வருகிறது.
ஈரோடு கொங்கம்பாளையம் எஸ்.வி.என்.பள்ளி, ரங்கம்பாளையம் கொங்கு மேல்நிலை பள்ளி, கலைமகள் கல்வி நிலைய பள்ளி மாணவியரின் கலை நிகழ்ச்சி ஒத்திகை, மைதானத்தில் நேற்று காலை நடந்தது. கலை நிகழ்ச்சி ஒத்திகை, விழா ஏற்பாடுகளை ஆர்.டி.ஓ., சதீஷ் ஆய்வு செய்தார். அவருடன் ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணியன் உடனிருந்தார். சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சியில், அரசு பள்ளி மாணவ, மாணவியர் இடம் பெறவில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement