dinamalar telegram
Advertisement

முத்தூர் கோவிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பு நிலம் மீட்பு

முத்துார் கோவிலுக்கு சொந்தமான, ௧௦ கோடி ரூபாய் மதிப்பிலான, ௩௦ ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.
காங்கேயம் தாலுகா முத்துாரில், மாதவராய பெருமாள் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலுக்கு, ஊடையம் பகுதியில் நிலங்கள் உள்ளன. இவை ஆக்கிரமிப்பில் இருந்தது. இதையடுத்து அறநிலையத்துறை இணை ஆணையர் உத்தரவின்படி ஆய்வு செய்யப்பட்டது. இதில் எட்டு பேர், 30.40 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்தது தெரியவந்தது. அவர்களே நிலங்களை தாமாக முன்வந்து ஒப்படைத்தனர்.
இதையடுத்து திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வராஜ், கோவில் செயல் அலுவலர் திலகவதி மற்றும் ஊழியர்கள், கோவில் நிலத்தில் அறிவிப்பு பலகைகளை நட்டனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு, 10 கோடி ரூபாய் இருக்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement