அரசு ஊழியராக்க கோரி அமைச்சரிடம் முறையீடு
மாநகராட்சி, நகராட்சி பணியாளர்களை, அரசு ஊழியராக்க கோரி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருவிடம், தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்க கூட்டமைப்பு மாநில தலைவர் ராதாகிருஷ்ணன், பொது செயலாளர் சீத்தாராமன் மனு வழங்கினர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த, 1983ல் சேலத்தில் நடந்த, நகராட்சி பணியாளர்களின் கூட்டமைப்பு மாநகராட்டில், அப்போதைய முதல்வர் கருணாநிதி, நகராட்சி, மாநகராட்சி பணியாளர்களை அரசு ஊழியர்கள் என அறிவித்து, அரசாணை பிறப்பித்தார். ஆனால், அரசாணை ரத்து செய்யப்பட்டது.
அதேசமயம், டவுன் பஞ்சாயத்து, நகரங்களில் பணி செய்யும் தலைமை எழுத்தர் உட்பட சில பணியாளர்கள் மட்டும் அரசு ஊழியர்களாக்கப்பட்டனர்.
எனவே, நகராட்சி, மாநகராட்சி பணியாளர்களை, அரசு ஊழியராக்க வேண்டும். இதனால் நகராட்சி, மாநகராட்சி பணியாளர்கள் அரசு மருத்துவமனைகளில் ஏனைய அரசு ஊழியர்களை போல கட்டணமின்றி சிகிச்சை பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!