dinamalar telegram
Advertisement

காங்கேயத்தில் கட்சி கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றிய பா.ஜ.,வினர்

கட்சி கொடிக்கம்பத்தில், பா.ஜ.,வினர் தேசியக்கொடியை ஏற்றியது, காங்கேயத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் நாளை, 75வது ஆண்டு சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட பல்வேறு ஏற்பாடு நடந்து வருகிறது. நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடு, வியாபார நிறுவனங்களில், தேசியக்கொடியை, ௧௩ம் தேதி முதல், ௧௫ம் தேதி வரை ஏற்றுமாறு, மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கான வழிகாட்டு முறைகளையும் அறிவித்துள்ளது.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில், பா.ஜ., தெற்கு மாவட்ட விவசாய அணி மாவட்ட செயலாளர் ரகுபதி தலைமையில், திருப்பூர் சாலையில் உள்ள மெடிக்கல் பஸ் ஸ்டாப் பகுதியில், பா.ஜ., கொடிக்கம்பத்தில் நேற்று தேசியக்கொடி ஏற்றினர். பா.ஜ.,வினரின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காங்கேயம் தாசில்தார் புவனேஸ்வரி கூறும்போது, ''விசாரணை நடத்தி, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement