dinamalar telegram
Advertisement

கிருஷ்ணகிரி நகராட்சி கிடங்கில் 60 ஆண்டு குப்பையால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு

கிருஷ்ணகிரி நகராட்சி குப்பை கிடங்கில், 60 ஆண்டாக குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பையை அள்ளாததால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், நோய்தொற்று அபாயத்தில் மக்கள் உள்ளனர். நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி நகராட்சியையொட்டி, பழையபேட்டை, கொத்தபேட்டா பகுதியில், மகாராஜகடை செல்லும் வழியில், 5 ஏக்கர் பரப்பளவில் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, கடந்த, 60 ஆண்டுகளாக நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை, மலைபோல் தேங்கி கிடக்கிறது. மழைக்காலங்களில், குப்பையுடன் தண்ணீர் தேங்கி, பின்

கழிவுநீராக மாறி, நிலத்துக்கு செல்வதால், நிலத்தடி நீர்மட்டம் அசுத்தமாகி, நோய் தொற்று ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கடந்த, 2012ல் எம்.பி., நிதியிலிருந்து மட்கும், மட்காத குப்பையை பிரித்தெடுக்க இயந்திரம் வாங்கப்பட்டது. அது செயல்படாமல் கைவிடப்பட்டது. இதனால், மட்கும் குப்பையிலிருந்து பிரிக்கப்படும் முதல் மண், குப்பை கிடங்கு வளாகத்தில் உள்ள நுண் உயிரி உரம் தயாரிப்புக்கும்; இரண்டாவது மண், சாலை பள்ளங்களுக்கும்; மூன்றாவதாக பிரிக்கப்படும் மண், தொழிற்
சாலைகளுக்கும் அனுப்பப்படும் என, கூறினர். ஆனால், இதில் எந்த நடைமுறையும் பின்பற்றவில்லை.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனர் (பொ) சரவணன் கூறியதாவது:
கிருஷ்ணகிரி நகராட்சியில், 60 ஆண்டாக குவித்து வைக்கப்பட்ட, 61 ஆயிரம் கியூபிக் மீட்டர் குப்பையை அகற்ற, நகராட்சி நடவடிக்கை எடுத்தது. இதற்காக, 2018ல் டெண்டர் விடப்பட்டு, 13 ஆயிரம் கியூபிக் மீட்டர் குப்பை
அகற்றப்பட்டது. அதேபோல், 2012ல் குப்பை பிரிக்கும் இயந்திரம் வாங்கினாலும், அது முறையாக செயல்படுத்த
முடியவில்லை.
அதன் வடிவமைப்பு, இயக்கத்திறனை எளிமையாக்கி, குப்பையை உடனடியாக அகற்ற நகராட்சி தலைவர் பரிதா நவாப் உத்தரவிட்டுள்ளார். தற்போது, மட்கும், மட்காத குப்பையை பிரித்து வாங்குவதால், இனி குப்பை சேர வாய்ப்பில்லை. இருக்கும் குப்பையை இன்னும், 6 மாதத்தில் முற்றிலும் அகற்றிவிடுவோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement