dinamalar telegram
Advertisement

கால்நடை மருத்துவர் பணியிடம் காலி ஆவின் பொது மேலாளர் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கால்நடை மருத்துவர் பணியிடம் ஒன்று காலியாக இருப்பதாக, ஆவின் பொது மேலாளர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் (ஆவின்), தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தில், தேன்கனிக்கோட்டை பகுதியில் ஓராண்டு (2022 - 23) ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய, கால்நடை மருத்துவர் பணியிடம் ஒன்று காலியாக உள்ளது.

மாதந்தோறும் ஊதியமாக, 43 ஆயிரம் ரூபாய் (அனைத்து படிகள் உட்பட) வழங்கப்படும். இப்பணிக்கு வரும், 23ல், கிருஷ்ண
கிரியில் உள்ள ஒன்றிய ஆவின் நிர்வாக அலுவலகத்தில் நேர்முக தேர்வு நடக்க உள்ளது. எனவே, தகுதி மற்றும் விருப்பமுள்ள விண்ணப்ப
தாரர்கள் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேர்முக தேர்வில் பங்கேற்கலாம். கால்நடை மருத்துவத்தில் இளங்கலை படித்திருக்க வேண்டும். இருசக்கர வாகனம் மற்றும் ஓட்டுனர் உரிமம் இருக்க வேண்டும். கம்ப்யூட்டர் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement