ADVERTISEMENT
உசிலம்பட்டி-''ஆங்கிலேயர் ஆட்சிபோல உப்புக்கும், உணவுக்கும் மத்திய பா.ஜ.,அரசு வரிபோடுகிறது,''என, முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி பேசினார்.கருமாத்தூர் மூணாண்டிபட்டியில் 'விடுதலைப் போரில் கம்யூனிஸ்ட்டுகள்' சுதந்திர தின சிறப்பு கருத்தரங்கம் மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன் வரவேற்றார். முன்னாள் செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட குழு உறுப்பினர்கள் செல்லக்கண்ணு, முத்துராணி, மாநிலக்குழு உறுப்பினர் பொன்னுத்தாய், மதுரை நகர் மாவட்ட செயலாளர் கணேசன், முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட குழு உறுப்பினர் முத்துப்பாண்டி நன்றி கூறினார்.பாலபாரதி பேசியதாவது:கம்யூ., கோரிக்கையானஇந்தியா பூரண சுதந்திரத்தை நிராகரித்த காங்., வேறு வழியின்றி 1929ல் நடைபெற்ற மாநாட்டில் தீர்மானமாக கொண்டு வந்தது. சுதந்திர போராட்டத்தில் விவசாயிகள், ஒடுக்கப்பட்ட மக்கள், தொழிலாளர் என பங்கெடுக்க வைத்தது கம்யூனிஸ்ட்தான். அக்காலத்தில் மூவர்ண கொடியை ஏற்றினால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அடக்குமுறை காலத்தில் சிறையில் கழித்தவர்கள் கம்யூ., கட்சியினர். நாடு சுதந்திரம் பெற்ற போது சிறையில் இருந்து வெளியே வந்தவர்கள் அவர்கள் தான். தற்போது பா.ஜ., ஆட்சியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி போல் தற்போது உப்புக்கும், உணவுக்கும் மத்திய பா.ஜ.,அரசு வரி போடுகிறது. 156 லட்சம் கோடி கடனில் பா.ஜ., அரசு உள்ளது, என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!