dinamalar telegram
Advertisement

ரூ.40 லட்சம் முறைகேடு: எஸ்.ஐ., உட்பட ஐவர் கைது

தஞ்சாவூர்:போலீஸ் கேண்டீனில் 40 லட்சம் ரூபாய் முறைகேடு செய்த போலீஸ் எஸ்.ஐ. உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி. அலுவலகம் எதிரே போலீஸ் கேண்டீன் செயல்பட்டு வருகிறது. இங்கு 2021 பிப்ரவரி முதல் தற்போது வரை உள்ள கணக்குகளை தணிக்கை அலுவலர்கள் சில நாட்களாக தணிக்கை செய்தனர்.இதில் கேண்டீனில் விற்பனை செய்ய வாங்கப்பட்ட எலக்ட்ரானிக் உள்ளிட்ட பல பொருட்களுக்கான ரசீது உள்ளிட்ட ஆவணங்கள் இருப்பதும் விற்பனை செய்ததற்கான ஆவணங்கள் இல்லை எனவும் அவை வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

விசாரணையில் கேண்டீனில் பணியாற்றி வரும் காவலர் பாலச்சந்திரன் குறைந்த விலையில் வாங்கப்பட்ட எலக்ட்ரானிக் மளிகை பொருட்களை தனது மைத்துனர் பாஸ்கரனின் கடைக்கு அனுப்பி முறைகேடாக அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

தில் 40 லட்சம் ரூபாய் வரை முறைகேடு செய்திருப்பதும் கண்டறியப்பட்டது. இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட குற்றப் பிரிவு அலுவலகத்தில் தணிக்கை அலுவலர்கள் புகார் அளித்தனர். கேண்டீனில் பணியாற்றி வரும் எஸ்.ஐ. வீராசாமி 54, காவலர்கள் வீரம்மாள் 29, பாலச்சந்திரன் 45, பாலச்சந்திரனின் மைத்துனர் பாஸ்கரன் 40, பாலச்சந்திரன் மனைவி சித்ரா 38, ஆகிய ஐந்து பேரை நேற்று கைது செய்தனர்.காவலர்கள் கோகிலவாணி வளர்மதி மனோஸ்ரீ ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement