dinamalar telegram
Advertisement

கல்லணை கால்வாய் கரையில் இடிந்து விழுந்தது நடைபாதை

ADVERTISEMENT
தஞ்சாவூர்:தஞ்சாவூரில், கல்லணை கால்வாய் ஆற்றின் கரையில் தடுப்பு கம்பிகளுடன் கூடிய நடைபாதை,இடிந்து விழுந்தது.

தஞ்சாவூர், மாநகரின் மையப்பகுதியில் கல்லணை கால்வாய் ஓடுகிறது. இர்வின் பாலத்தில் இருந்து சுற்றுலா மாளிகை வரை, கரையின் இருபுறமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பக்கவாட்டு தடுப்பு கம்பிகளுடன் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையில், தினமும் ஏராளமான பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர்.

தற்போது, கல்லணை கால்வாய் ஆற்றில் விநாடிக்கு, 3,221 கன அடி வீதம் தண்ணீர் செல்கிறது. நேற்று, கல்லணைக் கால்வாய் ஆற்றின் இடதுபுற கரையில் நடைபாதை சரிந்து, பக்கவாட்டு தடுப்பு கம்பியுடன் ஆற்றில் விழுந்துள்ளது. அந்த நேரத்தில் யாரும் நடந்து செல்லாததால், பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

நீரின் வேகம் அதிகமாக இருப்பதால், மண் அரிப்பு ஏற்பட்டு நடைபாதை சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், 20 மீட்டர் துாரத்துக்கு நடைபாதை சேதமானது. இதற்கிடையே, முழுவதுமாக கரை உடைப்பு ஏற்பட்டு பெரிய விபத்து ஏற்படும் முன், அதிகாரிகள் விரைந்து மண் அரிப்பை சரி செய்து, கரையை பலப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement