dinamalar telegram
Advertisement

வெவ்வேறு விபத்துகளில் 6 பேர் பலி

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்று வெவ்வேறு விபத்துக்களில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞர் உட்பட ஆறு பேர் இறந்தனர்.

முள்கம்பி வேலி




நாகர்கோவில் அருகே திருப்பதிசாரம், பூங்கா நகரைச் சேர்ந்தவர்கள் பாஸ்கரன், 38; ஜான்சன், 47. நேற்று காலை கன்னியாகுமரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். ஹெல்மெட் அணியவில்லை.கொட்டாரம் அருகே எதிரே வந்த அரசு பஸ் இவர்கள் மீது மோதியதில், இரண்டு பேரும் துாக்கி வீசப்பட்டனர். இதில், ஜான்சன் சம்பவ இடத்திலும், பாஸ்கரன் மருத்துவனை செல்லும் வழியிலும் இறந்தனர். கன்னியாகுமரி போலீசார் விசாரிக்கின்றனர்.
குலசேகரம், பொன்மனையைச் சேர்ந்தவர் ராஜசேகர், 40. ஈஞ்சக்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜன், 34. நிலத்துக்கு முள்கம்பி வேலி அமைக்கும் இவர்கள், நேற்று முன்தினம் முட்டத்தில் பணி முடிந்து மோட்டார் சைக்களில் இரணியல் - தக்கலை ரோட்டில் வந்து கொண்டு இருந்தனர்.அப்போது, ஆத்திவிளையைச் சேர்ந்த பிரதீஷ், 28; ரெஜூ, 30, ஆகியோர் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், இவர்கள் மீது மோதியதில் நான்கு பேரும் துாக்கி வீசப்பட்டனர்.இதில் ராஜசகேர், பிரதீஷ் சம்பவ இடத்தில் இறந்தனர். இரணியல் போலீசார் விசாரிக்கின்றனர்.
விசாராணை
திருவட்டார், தோட்டவரத்தைச் சேர்ந்தவர் செர்லின், 28; நண்பர் விஜயன், 31. இருவரும் இரு நாட்களுக்கு முன் மோட்டார் சைக்களில் ஆற்றுார் நோக்கி சென்றனர். ஹெல்மெட் அணியவில்லை.கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதியது. செர்லின் சம்பவ இடத்தில் இறந்தார். ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயன் இறந்தார். திருவட்டார் போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement