dinamalar telegram
Advertisement

திருநெல்வேலி கலெக்டருக்கு விருது

ADVERTISEMENT
திருநெல்வேலி:பிரசவ காலத்தில் கர்ப்பிணி தாய்மார்களை பாதுகாக்க இணைய தள தாய்-கேர் திட்டம், பாபநாசம் காணியின மலைவாழ் மக்கள் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்திய திருநெல்வேலி கலெக்டர் விஷ்ணு தமிழக அரசின் நல்லாளுமை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் மனிதவள மேலாண்மை துறை சார்பில் ஆண்டுதோறும் அரசு திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்வதில் புதிய யுக்திகள், முயற்சிகள் வழிமுறைகளை மேற்கொள்ளும் நிறுவனம், குழுவிற்கு அரசு நல்லாளுமை விருது வழங்குகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் செயற்கை நுண்ணறிவு தாய்-கேர் திட்டத்தை கலெக்டர் விஷ்ணு சிறப்பாக செயல்படுத்தினார். மேலும் பாபநாசம் சேர்வலாறு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வசிக்கும் 145 காணி மலை வாழ் குடும்பங்களுக்கு சோலார் மின் திட்டம், அவர்கள் உற்பத்தி செய்யும் தேன், காய் கனிகளை திருநெல்வேலியில் சந்தைப்படுத்துவதற்கான சிறப்பு திட்டங்களை செய்தார்.
இது குறித்து தினமலர் நாளிதழில் விரிவாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. தற்போது அவர் நல்லாளுமை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement