dinamalar telegram
Advertisement

290 கிராமங்களுக்கான நரிப்பையூர் குடிநீர் திட்டம்; புதிய தொழில்நுட்பத்தில் அமைத்தால் பயனுண்டு

சாயல்குடி-ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சிக்கு இலக்கான பகுதிகளாகவும், நிலத்தடி நீர் உவர்ப்பு தன்மை கொண்டதாகவும் விளங்கும் கடலாடி, சாயல்குடி ஒன்றியத்திற்கு உட்பட 290 கிராமங்களுக்குகுடிநீர் வழங்கிய நரிப்பையூர் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் முடங்கியதால் இந்தகிராமங்களுக்கு குடிநீர் என்பது கானல் நீராகவே இருந்து வருகிறது.

காவிரி கூட்டு குடிநீர் திட்டம் 2007 துவக்கப்பட்டு கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த குடிநீர் கடலாடி, சாயல்குடி பகுதிக்கு முறையாக கிடைக்கவில்லை. இதனால் குடிநீருக்காக கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். இதனால் 1998ல் அப்போதைய தி.மு.க., அரசு நரிப்பையூரில் 6 ஏக்கரில் ரூ. 40 கோடி மதிப்பீட்டில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை துவக்கியது.ஆரம்பத்தில் பெல் நிறுவனம் சார்பில் 290 கிராமங்களுக்கு சிறு மேல்நிலைத் தொட்டிகள், தரைமட்ட தொட்டி, பைப் லைன்கள் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.


2005ல் பெல் நிறுவனஒப்பந்தம் நீட்டிப்பு செய்யப்படாமல் ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு தோஷியான் நிறுவனம் சார்பில் குறைந்த ஒப்பந்த தொகை பெறப்பட்டு ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டது.இதில் முறையான பராமரிப்பு, பணியாளர் பற்றாக்குறையாலும் இத்திட்டம் நாளடைவில் முடக்கப்பட்டு 2012ல் முழுமையாக முடங்கியது.தி.மு.க., ஆட்சியில் துவக்கப்பட்டதால் அ.தி.மு.க., ஆட்சியில் நரிப்பையூர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் குறித்து எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

தற்போது, தி.மு.க., அரசு நரிப்பையூர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளை மீண்டும் செயல்படுத்துவதற்காக ஓராண்டிற்கு முன்பு அமைச்சர் நேரு தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதற்காக நிதி ஒதுக்கப்பட்டு திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என அறிவித்தனர்.


ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை.மீண்டும் பயன்பாட்டுக்கு வருமா--------: நரிப்பையூர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை தற்போதுள்ள புதிய தொழில்நுட்பத்தில்,கட்டமைப்பு வசதிகளுடன் மீண்டும் புதுப்பித்து முன்பு போல் மீண்டும் கிராமங்களுக்கு குடிநீர் வசதி செய்து தந்தால் பயனுள்ளதாக இருக்கும்.எனவே தமிழக அரசு கிடப்பில் உள்ள நரிப்பையூர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement