dinamalar telegram
Advertisement

போதை புழக்கம் அதிகரிப்பு: மத்திய அமைச்சர் முருகன் கவலை

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: ''தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது,'' என, மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்தார்.

துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் சுதந்திர தினத்தன்று சுதந்திரப் போராட்ட தியாகிகளின் நினைவிடங்களை கவுரவிப்பது குறித்து, மத்திய இணை அமைச்சர் முருகன் ஆய்வு செய்தார். துாத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் பாரதியார் மணிமண்டபத்தில், சுதந்திர தினத்தன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.

ஆக., 20ல் திருநெல்வேலியில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அவரது நினைவு தினத்தையொட்டி, சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதோடு, மத்திய அரசு சார்பில் தபால் தலை வெளியிடும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இது தொடர்பாகவும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
முருகன் கூறுகையில், ''தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது. போதை பொருட்களை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.''மின்சார சீர்திருத்த சட்டத்தால் விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு இலவச மின்சாரம் நிறுத்தப்படும் என இதுவரை தெரிவிக்கப்படவில்லை. முழு சட்ட திருத்தமும் வந்த பிறகு தான் தெரியவரும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (28)

 • TRUBOAT - Chennai,இந்தியா

  கவலை பட நாங்கள் இருக்கிறோம்... அதிகாரத்தில் இருக்கும் நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்... இது ஒரு தனிப்பட்ட மாநிலத்தின் பிரச்சினை அல்ல. ஒட்டுமொத்த தேசத்தின் பிரச்சனை..... கஞ்சா / போதை பொருள் விற்றால் மரண தண்டனை விதிக்கவேண்டும்.... மாறாக ஜாமீன் கொடுத்து வழியனுப்பி வைத்து திரும்ப அதே தொழிலை செய்கிறான்...

 • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

  5% குடிப்பழக்கம் உள்ள தமிழ்நாட்டை விட்டுவிட்டு, 20% குடிப்பழக்கம் உள்ள உ.பி.யில்(மற்றும் பா்ஜ.க.ஆளும் மாநிலங்களில்) பிரச்சாரம் செய்யச சொல்லுங்கள்

  • mindum vasantham - madurai,இந்தியா

   கேரளா tops per capita consumption of liqour then it is Tamilnadu

 • Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா

  போதை வஸ்துக்களை கடத்துவதே உங்க கட்சிகாரங்கதானே

 • raja - Cotonou,பெனின்

  அதுக்குதான் இந்த விடியாமூஞ்சி விடியல் துக்ளக் இப்போ சர்வாதிகாரியா ஆகப்போறானாம்....ஹி ஹி ஹி..

  • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

   டாஸ்மாக் கெடுதிதான். ஆனால் அதைவிட கெடுதி குஜராத் வழியாக வரும் கஞ்சா

  • raja - Cotonou,பெனின்

   எதுக்கு தமிழகத்துக்கு உள்ளே விடரான் இந்த விடியாமூஞ்சி? அவன் கொள்ளை அடிக்கத்தான் என்று தமிழர்கள் நம்ப தொடங்கி விட்டார்கள்....

  • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

   கடந்த ஆட்சியில் டாஸ்மாக் எதிர்ப்பு பேனர் பிடித்து மனைவி சகிதம் நின்றதை மறந்துவிட்டாயா நாரசொலி அடிமையே ? கஞ்சா டாஸ்மாக்கை விட கெடுதி என்றால் தமிழகத்தில் தாராளமாக புழங்க அனுமதித்தது ஏன் ? உனது மூர்க்கத்தை வாழ வைக்கத்தானே ?

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  போதைப்பழக்கம் என்று கூறவேண்டாம் இனி குடிப்பழக்கம் என்று சொன்னாலே போதும், இதுவும் போதைதான் , அரசாங்கம் விற்கும் சாராயம் ஏதோ புனித நீர்போல் அதைப்பத்தி யாருமே பேசுவது இல்லாமல் போய்விட்டது. இன்று பள்ளி குழந்தைகள் இந்த குடிக்கு அடிமையாகிவிட்டார்கள் . ஆகவே ஆளும் கட்சி எதிர்க்கட்சியினர் மக்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் அவர்களது நல்வாழ்வில் கவனம் செலுத்துவது நல்லது, வந்தே மாதரம்

  • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

   குஜராத் முதல்வராக இருப்பவரையா? இல்லை குஜராத் முதல்வராக இருந்தவரையா? குஜராத்தான் போதை கடத்தலின் தலைமையகம். நண்பரின் துறைமுகம்தான் போதையின் நுழைவு வாயிலாக இருப்பது நாட்டுக்கே தெரியும்.

Advertisement