dinamalar telegram
Advertisement

சரக்கு ஆட்டோ லாரி மோதி குழந்தை உட்பட 2 பேர் பலி

துாத்துக்குடி:திருவேங்கடம் அருகே சரக்கு ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில், எட்டு மாத குழந்தை, இளம்பெண் பலியாகினர்.

தென்காசி மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன், 39. அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் குடும்பத்தினர் உட்பட, 18 பேர் சரக்கு ஆட்டோவில், விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர்.

திருவேங்கடம் அருகே சிப்பிப்பாறையில், எதிரே மார்த்தாண்டத்தில் இருந்து திருவேங்கடம் நோக்கி சென்ற டிப்பர் லாரி, லோடு ஆட்டோ மீது மோதியது.இதில், ராஜதுரை என்பவரின் எட்டு மாத ஆண் குழந்தை கபிலேஷ் குமார், மணிகண்டன் மனைவி கிருஷ்ண லீலாவதி, 28, ஆகியோர் பலியாகினர். படுகாயமடைந்த ஏழு பேர், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.திருவேங்கடம் போலீசார் விசாரித்து, டிப்பர் லாரி டிரைவர் சிவராஜை கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement