dinamalar telegram
Advertisement

சரக்கு ஆட்டோ மீது லாரி மோதி குழந்தை உட்பட 2 பேர் பலி

தூத்துக்குடி:தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே சரக்கு ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் எட்டு மாத குழந்தை கபிலேஷ்குமார், கிருஷ்ண லீலாவதி 28 ஆகியோர் பலியாயினர்.

தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்தவர்ஈஸ்வரன் 39. அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் குடும்பத்தினர் உட்பட 18 பேர் சரக்கு ஆட்டோவில் விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு சென்றனர்.

திருவேங்கடம் அருகே சிப்பிப்பாறையில் வந்த போது எதிரே மார்த்தாண்டத்தில் இருந்து திருவேங்கடம் நோக்கி சென்ற டிப்பர் லாரி, லோடு ஆட்டோ மீது மோதியது. இதில் ராஜதுரை என்பவரின் 8 மாத ஆண் குழந்தை கபிலேஷ் குமார், மணிகண்டன் மனைவி கிருஷ்ண லீலாவதி 28, ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி பலியாயினர்.

ஏழு பேர் திருநெல்வேலி அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர். திருவேங்கடம் போலீசார் விசாரித்தனர். டிப்பர் லாரி டிரைவர் மார்த்தாண்டம் சிவராஜை கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement