dinamalar telegram
Advertisement

தவறுகள் மீது நடவடிக்கை எடுக்க தவறாத முதல்வர்: கே.எஸ்.அழகிரி சர்ட்டிபிகேட்

நாகர்கோவில்:தவறுகள் மீது நடவடிக்கை எடுப்பதில் முதல்வர் ஸ்டாலின் தவறாது செயல்படுகிறார் என்று தமிழக காங்., தலைவர் கே.எஸ். அழகிரி கூறினார்.

'பாரத் ஜோடோ' என்ற பாரதமே ஒன்றிணைவோம் என்ற பாத யாத்திரையை ராகுல் செப்.,7ல் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தொடங்குகிறார். இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நாகர்கோவிலில் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் நடந்தது. இதில் பொது செயலாளர்கள் திக்விஜய்சிங், வேணுகோபால், ஸ்ரீவல்ல பிரசாத், விஜய்வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

இதில் ராகுல் பயணம் செய்யும் பாதை, தங்கும் இடம், ஏற்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டது. முன்னதாக அழகிரி கூறியதாவது: அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளதால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரிய தொழில் அதிபர்களுக்கு மத்திய அரசு 10 லட்சம் கோடி ரூபாய் வங்கி கடனை தள்ளுபடி செய்துள்ளது. ஏழை மக்கள் மீது வரி திணிக்கப்படுகிறது.

மகாராஷ்டிராவில் சிவசேனாவை உடைத்து பா.ஜ., அங்கு ஆட்சி நடத்துவது போல பீகாரிலும் செய்ய முயற்சித்தனர். ஆனால் அவர்கள் அதில் படுதோல்வி அடைந்துள்ளனர். 5ஜி அலைகற்றை ஏலத்தில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது. பொதுவாக ஆட்சியில் உள்ளவர்கள் தவறுகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் தவறுகள் நடந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் தவறுவது இல்லை, என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement