dinamalar telegram
Advertisement

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1.45 லட்சம் கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு, ஒரு லட்சத்து, 45 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென் மேற்கு பருவமழை தீவிரத்தால், கர்நாடகாவில் உள்ள கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால், அணையின் பாதுகாப்பு கருதி காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை, கபினியிலிருந்து வினாடிக்கு, 15 ஆயிரம் கன அடியும், கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து வினாடிக்கு, 96 ஆயிரத்து, 835 கன என, இரு அணைகளிலிருந்தும் மொத்தம், ஒரு லட்சத்து, 11 ஆயிரத்து, 835 கன அடி உபரி நீர் தமிழகத்திற்கு திறக்கப்படுகிறது.

தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, பிலிகுண்டுலு, நாட்றாம்பாளையம், கேரட்டி, ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் மழை குறைந்தது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, ஒரு லட்சத்து, 40 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு, ஒரு லட்சத்து, 45 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பால், மெயின் பால்ஸ்க்கு செல்லும் நடைப்பாதை தண்ணீரில் மூழ்கியுள்ளது. சினி பால்ஸ், மெயின்பால்ஸ், ஐந்தருவி, ஐவர்பாணி, உள்ளிட்ட அனைத்து அருவிகளும் தண்ணீரில் மூழ்கி வெள்ளக்
காடாக மாறியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement