dinamalar telegram
Advertisement

தீயில் தள்ளியதால் தந்தை மரணம்; மகனுக்கு ஆயுளுக்கு பதிலாக 10 ஆண்டு சிறை

மதுரை: சொத்து தகராறு பிரச்னையில் தந்தையை தீயில் தள்ளிவிட்டு கொலை செய்ததாக மகனுக்கு நாகர்கோவில் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, 10 ஆண்டுகள் சிறை தண்டனையாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மாற்றியமைத்தது.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே வழுக்கம்பாறை விஜயகுமார். டாஸ்மாக் கடையில் ஊழியராக வேலை செய்தார். இவரது தந்தை பொன்னையா. அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவருக்கு 2 மகன்கள், 3 மகள்கள். பொன்னையா மகள்களுடன் குமரண்டிதருவாயில் வசித்தார். அவருக்கும், விஜயகுமாருக்கும் சொத்து பிரச்னை ஏற்பட்டது.

2014 மார்ச் 19 ல் தந்தை, சகோதரியிடம் விஜயகுமார் தகராறு செய்தார். ஆத்திரத்தில் தந்தை, சகோதரியின் ஆடைகளை வெளியே எடுத்து வீசி தீ வைத்து எரித்தார். தந்தையை நெருப்பில் தள்ளிவிட்டு, தகாத வார்த்தைகளால் பேசினார். மருத்துவமனை சிகிச்சையிலிருந்த பொன்னையா இறந்தார். விஜயகுமார் மீது ராஜக்காமங்கலம் போலீசார் கொலை வழக்கு பதிந்தனர். அவருக்கு 2019 ல் நாகர்கோவில் விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து விஜயகுமார் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ேஹமலதா அமர்வு:பொன்னையாவின் மரணத்திற்கு தீக்காயங்கள் காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் உள்ளது. அவர் இறப்பதற்கு முன் மது அருந்தியதாகவும் உள்ளுறுப்பில் ஆல்கஹால் இருந்ததும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மது அருந்தியதால் மரணம் ஏற்பட்டதாக அறிக்கையில் கூறவில்லை. தனது தந்தையைக் கொலை செய்ய முன்கூட்டியே மனுதாரர் திட்டமிடவில்லை. அவர், 'இன்று தப்பி விட்டாய். உன் சாவு என் கையில்தான்,' என கூறியுள்ளார். கோபத்தின் உச்சத்தில் கூறியுள்ளார்.

இத்தகைய தருணங்கள் பொதுவாக மனிதர்களை நிதானம் இழக்கச் செய்து, சில செயல்களை செய்ய துாண்டுகிறது. சம்பவத்தின் போது மனுதாரர் ஆயுதம் வைத்திருக்கவில்லை. தந்தையுடன் சண்டை இருந்தது. தந்தை சிகிச்சையில் 10 நாட்களுக்குப் பின் இறந்துள்ளார். அவருக்கு காயம் ஏற்படுத்தும் நோக்கத்தை மனுதாரர் கொண்டிருந்தார். மனு பகுதியாக அனுமதிக்கப்படுகிறது.

வழக்கின் சூழ்நிலை கருதி கொலைக் குற்றத்திற்குரிய பிரிவில் தண்டனை விதித்த கீழமை நீதிமன்ற உத்தரவு மாற்றியமைக்கப்படுகிறது. கொலைக் குற்றம் அல்லாத மரணம் விளைவித்தல் பிரிவின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement