dinamalar telegram
Advertisement

பட்டொளி வீசி பறக்கட்டும் தாயின் மணிக்கொடி : வீடு தோறும் தேசியக்கொடி வினியோகம்

வீடுகளில் பறக்க விடுவதற்காக, மாநகராட்சி சார்பில், தேசியக்கொடி இலவசமாக வழங்கப்
படுகிறது.

நாட்டின், 75வது சுதந்திர தினத்தை போற்றும் வகையில், வீடுகளில் மூன்று நாட்கள் தேசியக்கொடியை பறக்க விடுமாறு, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன்படி உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில், தேசியக்கொடி வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகராட்சி பகுதியில், நேற்று வீடுகள் தோறும் தேசியக்கொடி வழங்கப்பட்டது. மக்கள் ஆர்வத்துடன் பெற்றுக் கொண்டனர்.
இதுகுறித்து மாநகராட்சி நகர் நல அலுவலர் பிரகாஷ் கூறியதாவது: மாநகராட்சிக்கு உட்பட்டு, ௧.௩௦ லட்சம் குடியிருப்புகள் உள்ளன. இதில் அடுக்குமாடி குடியிருப்பு, லைன் வீடுகளில் தேசியக்கொடியை பறக்க வைக்க முடியாத சூழல் உள்ளது. தற்போது, 60 ஆயிரம் கொடி வந்துள்ளது. நான்கு மண்டலங்களுக்கும் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. 10ம் தேதி முதல் வழங்கி வருகிறோம். இப்பணி, 12ம் தேதி (இன்று) நிறைவு பெறும். வீடுகளின் முன்புறம் உயரத்தில் பறக்க விடுமாறு, மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement