dinamalar telegram
Advertisement

பீஹாரில் நடந்த மாற்றம் தொடக்கம்தான்! இ.கம்யூ., செயலாளர் முத்தரசன் கருத்து

''பீஹாரில் பா.ஜ.,வுடன் உறவில் இருந்த நிதீஷ்குமார், கம்யூ., மற்றும் காங்., கட்சியோடு இணைந்து ஆட்சி அமைத்துள்ளார். இது தொடக்கம் தான். இது முடிவல்ல. இது மேலும் தொடரும்,''என, இந்திய கம்யூ., கட்சி மாநில செயலாளர் முத்தரசன்
கூறினார்.

ஈரோடு மாவட்டம் கோபியில், இந்திய கம்யூ., கட்சி சார்பில், ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
இதில் பங்கேற்ற மாநில செயலாளர் முத்தரசன் கூறியதாவது:
மத்தியில் ஆட்சி செய்யும் வாய்ப்பை, பா.ஜ., தவறாக பயன்படுத்தி, அனைத்து மாநிலங்களிலும், தாங்களே ஆள வேண்டும் என்ற, ஜனநாயாக விரோத போக்கை கொண்டுள்ளனர்.
பீஹாரில் தொடர்ந்து பா.ஜ.,வுடன் உறவில் இருந்த நிதீஷ்குமார், கம்யூனிஸ்ட் மற்றும் காங்., கட்சியோடு இணைந்து ஆட்சி அமைத்துள்ளார். இது தொடக்கம் தான். இது முடிவல்ல. இது மேலும் தொடரும்.
மக்களால் தாங்கி கொள்ள முடியாத அளவுக்கு, விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது. தமிழகம் முழுவதும் வரும் ஆக.,30ல், விலைவாசி உயர்வுக்கு எதிராக, மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக, மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். மின்சார சட்ட திருத்த மசோதாவால், அத்துறை தனியார் வசமாகும். இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்
படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement