dinamalar telegram
Advertisement

வர்த்தக செய்திகள் - ஈரோடு

* சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நிலக்கடலை ஏலம் நேற்று நடந்தது. ஏலத்துக்கு, 1,636 மூட்டை வரத்தானது. ஒரு கிலோ அதிகபட்சம், 72.30 ரூபாய் வரை ஏலம் போனது. மொத்தம், 52 ஆயிரத்து, 734 கிலோ எடை நிலக்கடலை, 35.68 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
* அரச்சலுார் வினோபா நகர் துணை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 10 ஆயிரத்து, 305 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ, 21.89 ரூபாய் முதல், 25.45 ரூபாய் வரை விலை போனது. மொத்தம், 4,144 கிலோ எடை தேங்காய், 97 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது.

* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலை ஏலம் நேற்று நடந்தது. இதில் காய்ந்த நிலக்கடலை, 169 மூட்டை வரத்தானது. கிலோ, 56.86 -ரூபாய் முதல் 70 ரூபாய் வரை விற்றது. பச்சை நிலக்கடலை, 174 மூட்டை வரத்தாகி, ஒரு கிலோ, 27.36 ரூபாய் முதல்,- 36 ரூபாய் என ஏலம் போனது.
* கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நிலக்கடலை ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 15 விவசாயிகள், 269 மூட்டை காய்ந்த நிலக்கடலை கொண்டு வந்தனர். ஒரு கிலோ, 62.50 ரூபாய் முதல், 70.80 ரூபாய் வரை விலை போனது. மொத்தம், 5.69 லட்சம் ரூபாய்க்கு ஏலம் நடந்ததாக, விற்பனைகூட கண்காணிப்பாளர் ஜமுனா தெரிவித்தார்.
* புன்செய்புளியம்பட்டி கால்நடை சந்தை நேற்று கூடியது. இதில், 30 எருமைகள், 300 சிந்து மாடுகள், 200 ஜெர்சி மாடுகள் கொண்டு வரப்பட்டன. எருமைகள், 18-45 ஆயிரம் ரூபாய்; சிந்து மற்றும் கலப்பின மாடுகள், 15-48 ஆயிரம் ரூபாய்; வளர்ப்பு கன்றுகள், 4,000-14 ஆயிரம் ரூபாய் வரை விற்றது. இதேபோல், 300க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள், 200க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் வந்தன. ஐந்து முதல், 12 கிலோ வரையிலான வெள்ளாடு, 3,000 முதல், 6,500 ரூபாய்; ஐந்து முதல், 10 கிலோ வரையுள்ள செம்மறி ஆடுகள், 2,500 முதல், 5,500 ரூபாய் வரை விலை போனது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், கறவை மாடுகள், 1,000 முதல், 2,000 ரூபாய் வரை விலை உயர்ந்ததாக, விவசாயிகள் தெரிவித்தனர்.
* சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில், ஒரு கிலோ கனகாம்பரம், 1,350 ரூபாய்க்கு ஏலம் போனது. மல்லிகை கிலோ, 997, முல்லை 340, காக்கடா 350, செண்டுமல்லி 43, கோழிகொண்டை 130, சம்பங்கி 200, அரளி பூ 240, துளசி 30, செவ்வந்தி 240, ஜாதி முல்லை, 625 ரூபாய்க்கும் விற்பனையானது.
* ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு நேற்று, 5,000 ரூபாய் முதல், 15,000 ரூபாய் மதிப்பில், 1,000 கன்றுகள்; 30,000 ரூபாய் முதல், 60,000 ரூபாய் மதிப்பில், 300 எருமைகள்; 30,000 ரூபாய் முதல், 80,000 ரூபாய் மதிப்பில், 350 பசு மாடுகள் விற்பனைக்கு வந்தன.
தமிழகத்தின் பல்வேறு பகுதி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநில வியாபாரிகள், விவசாயிகள் மாடுகளை வாங்கி சென்றனர். இரு வாரமாக கடும் மழையால், விற்பனை குறைந்திருந்த நிலையில், அதிக எண்ணிக்கையில் கால்நடைகள் விற்பனையாகின.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement