dinamalar telegram
Advertisement

நுகர்பொருள் வாணிப கழகத்தில் ரூ.5.23 கோடி முறைகேடு?

ADVERTISEMENT
வாலாஜாபாத்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், அரசின் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளுக்கான கூலியாக, தொழிலாளர்களுக்கு வழங்கிய, 5.23 கோடி ரூபாய் யாரிடம் சென்றுள்ளது என, விவசாயிகள் தரப்பில் கேள்வி எழுந்து உள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், 3 லட்சம் ஏக்கருக்கு மேல், விவசாயிகள் நெல் சாகுபடி செய்கின்றனர்.குண்டுரகம்காஞ்சிபுரம் மண்டல நுகர்பொருள் வாணிப கழகத்தினர், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 88 நெல் கொள்முதல் நிலையங்கள்; செங்கல்பட்டு மாவட்டத்தில், 94 நெல் கொள்முதல் நிலையங்கள் என, இரு மாவட்டங்களிலும், 182 நெல் கொள்முதல் நிலையங்களை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவக்கினர்.அன்றில் இருந்து ஜூன் மாதம் இறுதி வரை என, எட்டு மாதங்கள் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.



நடப்பாண்டு சன்னரகம் கிலோ 20.60 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.குண்டுரகம், 19.68 ரூபாய்க்கு வாங்கப்பட்டது. 40 கிலோ எடையுள்ள நெல் மூட்டை 824 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகளிடம் இருந்து, 20.93 கோடி கிலோ நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டைவிட நடப்பாண்டு 10.08 கோடி கிலோ நெல் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.இதில், 40 கிலோ நெல் துாற்றி சுத்தம் செய்து, மூட்டை கட்டி லோடு ஏற்றுவதற்கு, மூட்டைக்கு 10 ரூபாய் கூலி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது என, நுகர் பொருள் வாணிப கழகத்தினர் விவசாயி ஒருவருக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதில் அளிக்கப்பட்டு உள்ளது.

கேள்விகள்



இந்த தகவல் அடிப்படையில், 40 கிலோ அடங்கிய ஒரு மூட்டைக்கு என, கணக்கீடு செய்தால், 27 லட்சத்து 12 ஆயிரத்து 500 நெல் மூட்டைகளாகும்.ஒரு நெல் மூட்டைக்கு தலா, 10 ரூபாய் வீதம் 5.23 கோடி ரூபாய் கூலி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக, நுகர் பொருள் வாணிப கழதத்தினர் தெரிவித்து உள்ளனர்.

காஞ்சிபுரம் பூதேரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலகிருஷ்ணன் கூறியதாவது:
அரசு கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் எடுத்து வரும் நெல் சுத்தம் செய்யப்பட்டு, லோடு ஏற்றுவதற்கு அரசு எவ்வளவு வழங்குகிறது?நெல் கொள்முதல் நிலையத்திற்கு எடுத்து வரும் மூட்டைக்கு பணம் கொடுக்க வேண்டுமா? உட்பட ஏழு விதமான கேள்விகள் கேட்டு, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு அளித்தேன்.

இதில், ஒரு மூட்டை நெல்லுக்கு, அரசு தரப்பில் 10 ரூபாய் வழங்குவதாகவும், விவசாயிகள் யாரும் பணம் அளிக்க தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.அவ்வாறு இருக்கும் போது, விவசாயிகளிடம் இருந்து மூட்டைக்கு 65 ரூபாய் என பெறப்பட்ட பணம் மற்றும் அரசு வழங்கிய 10 ரூபாய் யாரிடம் சென்றது.இதற்கு, நுகர்பொருள் வாணிப கழகத்தினர் முறையாக பதில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வு செய்கிறோம்!



நெல் துாற்றும் கூலி தொழிலாளர்களுக்கும், லோடு ஏற்றும் தொழிலாளர்களுக்கும், அரசு வழங்கிய பணம், அவரவர் வங்கி கணக்கில் செலுத்தி உள்ளோம். இதில், எந்த வித முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இல்லை. இருப்பினும், ஆய்வு செய்துதெரியப்படுத்துகிறோம்.- பெயர் வெளியிட விரும்பாதநுகர்பொருள் வாணிப கழக அலுவலர்,காஞ்சிபுரம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • GMM - KA,இந்தியா

    விஞ்ஞான ஊழல் மாநிலத்தில் முறைகேடு. ஒரு மூட்டை கூலி 10 ரூபாய் வங்கி கணக்கில் போடப்பட்டு விட்டது. மூடைக்கு 65 ரூபாய் விவசாயிகள் கொடுத்தது பற்றி உழைக்கும் மக்கள் தோழர் கம்யூனிஸ்ட் கட்சி கேட்கவில்லை. தனி நபர் கேள்வி எடுபடுமா? கட்சி வளர்ச்சி நிதி. விரும்பி கொடுத்தது. போதுமா.

Advertisement