dinamalar telegram
Advertisement

பாசி மோசடி வழக்கில் ஆக., 22ல் தீர்ப்பு: கோவை டான்பிட் கோர்ட் அறிவிப்பு

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

ADVERTISEMENT
கோவை: 'பாசி' நிதி நிறுவன மோசடி வழக்கில், ஆக., 22ல் தீர்ப்பு அளிக்கப்படுவதாக என, கோவை 'டான்பிட்' கோர்ட் அறிவித்துள்ளது.

திருப்பூரில், கடந்த 2011ல் செயல்பட்டு வந்த, 'பாசி டிரேடிங் இந்தியா பிரைவேட் லிமிடெட்' என்ற ஆன்லைன் நிதி நிறுவனத்தினர் அதிக வட்டி தருவதாக பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்தனர். ஆனால், டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றினர். சி.பி.ஐ., விசாரித்தபோது, 58 ஆயிரத்து 571 பேரிடம், 930 கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.



நிறுவன இயக்குனர்கள் மோகன்ராஜ், அவரது தந்தை கதிரவன், கமலவள்ளி ஆகியோர், சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு (டான்பிட்) சிறப்பு கோர்ட்டில், 2013 பிப்., 27ல், இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, ஒன்பது ஆண்டுகளாக சாட்சி விசாரணை நடந்து வந்தது.

அரசு தரப்பு மற்றும் எதிர் தரப்பு சாட்சியம், இரு தரப்பு வாதம் முடிந்ததை தொடர்ந்து, தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட இருந்தது.இதற்கிடையில், டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க தயாராக இருப்பதால், தீர்ப்பளிக்க தடை விதிக்க கோரி, சென்னை ஐகோர்ட்டில், மோகன்ராஜ் மனு தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து, வழக்கில் தீர்ப்பு கூற இடைக்கால தடை விதித்து கடந்த பிப்ரவரியில் ஐகோர்ட் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சி.பி.ஐ., தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இரு தரப்பு மனுக்களை விசாரித்த ஐகோர்ட், இடைக்கால தடையை நீக்கியதோடு, கோவை சிறப்பு நீதிமன்றம் தொடர்ந்து விசாரித்து தீர்ப்பளிக்க கடந்த 5ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.இது தொடர்பான உத்தரவு நகலை, நேற்று முன்தினம் சி.பி.ஐ., தரப்பு வக்கீல், கோவை டான்பிட் கோர்ட்டில் தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து, இவ்வழக்கில் ஆக., 22ல் தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி ரவி அறிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement