கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு: அரசு திட்டத்தில் வீடு கட்டுவோர் பரிதாபம்
இந்த செய்தியை கேட்க

காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் ஆகிய ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப, பிதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தில், வீடுகட்டுவதற்கு பணி ஆணை வழங்கப்பட்டு உள்ளன.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும், 11 ஆயிரத்து, 494 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.ஒவ்வொரு வீடு கட்டும் பணியாளிகளுக்கும், 100 மூட்டை சிமென்ட்; 320 கிலோ கம்பி குறைந்த விலைக்கு, அரசு வழங்கி வந்தது.
அதன்படி, ஒரு மூட்டை சிமென்டிற்கு, 325 ரூபாயும்; ஒரு கிலோ கம்பிக்கு, 55 ரூபாய் வீடு கட்டும் பயனாளிகளிடம் வசூலிக்கப்பட்டு வந்தது.திகைப்புகடந்த சில மாதங்களாக, கட்டுமானப்பொருட்களின் விலை உயர்வால், அரசு வீடு வழங்கும் திட்டத்தில், வீடுகள் கட்டி வரும் பயனாளிகள் இடையே, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக, செங்கல் மற்றும் கம்பி ஆகிய கட்டுமானப்பொருட்களின் விலை கிடு கிடுவென உயர்ந்திருப்பதால், அரசுவீடு வழங்கும் திட்டத்தில், தொகுப்பு வீடு கட்டி வரும் பயனாளிகள் செய்வதறியமால் திகைத்து வருகின்றனர்.
உதாரணமாக, 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த, ஒரு கிலோ கம்பி; 92 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 7 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த, செங்கல், 9 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.'எம் -- சாண்ட்'இதுதவிர, கட்டுமான கூலி தொழிலாளர்களின் சம்பளமும், 100 ரூபாய் வரையில் உயர்த்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், உத்திர மேரூர் ஒன்றியம், கரும்பாக்கம் தொகுப்பு வீடு கட்டும் பயனாளிகள் கூறியதாவது:
வீடுகட்டுவதற்கு தேவையான, கம்பிகள்; 'எம் -- சாண்ட்' மணல்; சிமென்ட் ஆகிய கட்டுமானப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது.இதுதவிர, கட்டுமான கூலி தொழிலாளர்களின் கூலியும் உயர்த்தப்பட்டு உள்ளது.இதனால், வீடு கட்டுமானம் செய்யாமல் தற்காலிகமாக நிறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பிரதமர் திட்டத்தில், கட்டிவரும் வீடுகளின் எண்ணிக்கை:
ஒன்றியம்/ வீடுகளின் எண்ணிக்கை
காஞ்சிபுரம்/ 2,119
குன்றத்துார்/ 1,516
ஸ்ரீபெரும்புதுார்/ 1,628
உத்திரமேரூர்/ 3,019
வாலாஜாபாத்/ 3,212
மொத்தம்/ 11,494.
விலை உயர்வு விபரம்
கட்டுமானப்பொருட்கள்/ பழைய விலை/ விலை ஏற்றம்
ஒரு செங்கல்/7 ரூ.7 / ரூ.9
ஒரு கிலோ கம்பி/ ரூ.65 / ரூ.92
கொத்தனார் கூலி/ரூ.900/ரூ.1000
பெரியாள் கூலி/ரூ.700/ரூ.800
சித்தாள் கூலி/ ரூ.500/ரூ.600.
வாசகர் கருத்து (18)
அதுக்கு தான் எல்லோரும் ரெடிமேட் வீட்டுக்கு மாறிக்கிட்டு வராங்க.. எப்போ வேண்டுமானாலும் தள்ளிக்கிட்டு போகும் ரெடிமேட் வீடுகள் விலையும் குறைவு...வசதியும் அதிகம் விரும்பிய எடுத்துக்கு தூக்கிகிட்டு போகலாம் .. அதை விட விற்றால் அதிக பணமும் கிடைக்கும்...
பிவிசி பொருட்களின் விலை மூன்று மடங்கு அதிகமாயிருக்கு.. அதை சொல்ல மாட்டீங்களா.?
திராவிடன் வந்தாலே எல்லா விலையும் ஏருதே அது ஏன்.....
இந்த விலை ஏற்ற மாபியா வை பொது மக்கள் வெற்றி கொள்ள முடியாது . அவர்கள் அரசியல் வாதி / விதிகளுடன் , பொது மக்களுடன் கலந்து இருக்கிறார்கள் . வேறு வழியில்லை அதிகம் சம்பாதிக்க வேண்டும் அல்லது வேலை செய்ய / பணம் சம்பாதிக்க கூச்ச பட கூடாது .
ஆக... வீடு கட்ட முடியாதுனு வாடகை வீட்டுக்கு போவாங்க மக்கள்.. அதுக்கும் ஜிஎஸ்டி வரி போட்டு விட்டால்.. அதான் ஐடியா... ///மொத்தத்தில் மக்கள்