dinamalar telegram
Advertisement

பவானிசாகர் இன்று திறப்பு

ADVERTISEMENT
சென்னை : பவானிசாகர் அணையில் இருந்து, இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து, நடப்பாண்டின் முதல் போக நன்செய் பாசனத்திற்கு, தண்ணீர் திறக்கப்படுகிறது. கீழ் பவானி திட்ட பிரதானக் கால்வாய், ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மானக் கால்வாய், இரட்டைப் படை மதகுகள் வழியாக, இன்று முதல் டிச., 9 வரை, 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.இதனால், ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள, 1.03 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement