dinamalar telegram
Advertisement

உயிர்பலி வாங்கிய டூவீலரில் மோதிய லாரி சாம்பலானது

ADVERTISEMENT
வாடிப்பட்டி : சமயநல்லுார் அருகே அடுத்தடுத்து நடந்த விபத்தில் ஒருவர் பலியானார், லாரி தீப்பிடித்து எரிந்தது.

சோழவந்தான் கண்ணுடையாள்புரம் மூர்த்தி மகன் சிபிராஜ் 19. நேற்று அதிகாலை 5:45 மணிக்கு டூவீலரில் மதுரை சென்றார். சமயநல்லுார் டபேதார் சந்தை அருகே நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றவர் மீதுமோதியதில் அந்த நபர் இறந்தார். அவர் அப்பகுதியில் வாட்ச்மேனாக பணியாற்றிய சென்னை வடபழனியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் 59, எனத் தெரிந்தது.

காயமடைந்த சிபிராஜ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அதேசமயம் கோயம்புத்துாரில் இருந்து அலுமினியம் ஏற்றி வந்த லாரி ரோட்டில் கிடந்த டூவீலரில் மோதி தீப்பிடித்தது. தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் பாண்டி நிலைய அலுவலர் சதக்கத்துல்லா தலைமையில் வீரர்கள் தீயை அணைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement