dinamalar telegram
Advertisement

தாய்பாலுக்கும் ஜி.எஸ்.டி., வரும்: காங்., மாஜி தலைவர் காட்டம்

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

கோபி : ''மக்கள் ஏமாந்தவர்களாக இருந்தால், கொஞ்ச நாளில் தாய்ப்பாலுக்கு கூட பா.ஜ.,வினர் ஜி.எஸ்.டி., வரி விதிப்பர்,'' என, தமிழக காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன் கூறினார்.

ஈரோடு மாவட்டம் நம்பியூரில், நேற்று அவர் கூறியதாவது: பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, தான் செல்லும் இடங்களில் எல்லாம் சட்டத்தை மீறுகிறார். போலீசார் கூறுவதை கேட்பதும் கிடையாது. போலீசார் அறிவுறுத்தியும், ஈரோடில் ஊர்வலமாக சென்றுள்ளார். முன்னாள் காவல் துறை அதிகாரிக்கு, இது அழகா?
பால், நெய், தயிர் மீது ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஏமாந்தவர்களாக இருந்தால், இன்னும் கொஞ்ச நாளில், தாய்ப்பாலுக்கு கூட ஜி.எஸ்.டி., வரி விதிப்பர். நெசவாளர்களுக்காக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தெருவில் இறங்கி போராடுவதை விட, அங்கு ஓடும் சாக்கடைகளை சுத்தம் செய்தால் மக்களுக்கு நன்மையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (52)

  • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

    தாய்ப்பாலை எந்த வூர்ல வைக்கிறார்கள்?. ...

  • ஸ்ரீ, மாயூரம் -

    அநாகரிகமான ஒரு அரசியல்வாதி

    • Matt P - nashville,tn

      இவருடைய அப்பா ஒரு நாகரிகமான அரசியல்வாதி. இவர் தாத்தாவின் தம்பி ஈவேரா கடவுள் இல்லை என்றும் மனிதர்களை பிரித்தும் அநாகரிக அரசியல் செய்தார். அந்த குடும்பத்தில் இப்படி ஒரு அரசியல்வாதி.

  • a natanasabapathy - vadalur,இந்தியா

    GST ikku pillaitaar suzhi pottathe umathu katchi thaan yenbathai maranthu vitteeraa ozhalin urrukkan congress unbathu ulakame arinthu kondu vittathu. Munnar Switzerland Lotus ippothu young India. Pasi meethu Anniya selaavani mosadi avar makan meethu poli passport vazhakku yenru varisai kattukirathu. Neer vetkamillaamal modiyai kurai koorukireet

  • r.sundaram - tirunelveli,இந்தியா

    ஜி எஸ் தி குழுவில் எல்லா மாநிலத்தும்தான் பிரிதிநித்துவம் இருக்கிறது, இதில் மத்திய அரசை மட்டும் குற்றம் சொல்வானேன்? திமுகதான் இப்படி எல்லாம் சொல்லும். இவருக்கு கூடா நட்புகள் சொல்லிக்கொடுத்தனவோ, இப்படி பேசுவதற்கு? நீங்கள் முதலில் உங்கள் முன்னாள் நிதி மந்திரியை கேட்டுப்பாருங்கள், அவர் ஏதற்க்கெல்லாம் வரி விதித்தார் என்று? வட்டியில்லா கடன் பண்டிகை முன்பணத்துக்கூட வட்டி போட்டு அதற்க்கு வரி விதித்தவர் உங்களவர்.

  • சீனி - Bangalore,இந்தியா

    காங்கிரசின் ஆ.எஸ்.பி.. ஆபாச அணித்தலைவன்....

Advertisement