ராக்கெட் ஏவுதளம் கட்டுமான பணிகள் விரைவில் துவங்கும்: இஸ்ரோ தலைவர்
இந்த செய்தியை கேட்க
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் நேற்று முன்தினம் இரவு, திருநெல்வேலி மாவட்டம், மகேந்திர கிரியில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு வந்தார். நேற்று துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் அருகே கடற்கரை கிராமமான குலசேகரப்பட்டினம் சென்றார். கடற்கரையை ஒட்டி ராக்கெட் ஏவுதளம் அமைக்க, 2,233 ஏக்கர் நிலம் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

நிலம் முழுமையாக கையகப்படுத்தப்பட்ட நிலையில், அங்கு இஸ்ரோ சார்பில் கட்டுமான பணிகளை துவக்குவது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டார்.ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ அதிகாரிகள், துாத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ், வருவாய் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இஸ்ரோ தலைவர் சோமநாத் கூறியதாவது:
இந்தியாவின் தெற்கு எல்லையில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க மிகச் சரியான இடம் கிடைத்துள்ளது. ஆய்வும் திருப்திகரமாக அமைந்தது. மத்திய அரசு அனுமதி, பாதுகாப்பு துறை அனுமதிக்காக காத்திருக்கிறோம். இந்த பகுதியில் இருந்து பெரிய ராக்கெட்டுகள் ஏவ முடியாது. எஸ்.எஸ்.எல்.வி., எனப்படும் சிறிய வகை ராக்கெட்டுகள் ஏவப்படும். விரைவில் கட்டுமான பணிகள் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (2)
இங்கு இஸ்ரோ ராக்கெட் தளம் கட்டினால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்: இலங்கைக்கு டீஸல் கடத்துவது பாதிக்கப்படும் என்று ஐயகோ வைகோ, ஓசிச்சோறு வீரமணி, குருமா, சைமன் ஆகியோர் இன்னும் கூக்குரல் ஆரம்பிக்கவில்லையா ?
இப்படி ராக்கெட் விட்டு நீங்க எண்ணத்தை செய்தீங்க கேட்ட வளர்ச்சி முன்னேற்றம் எல்லாம் சரிதான் போனதடவை ஏவின ரொக்கெட்டு புட்டு கிச்சு அதனை கொடியும் வேஸ்ட் அதை விவசாய மக்களுக்கு வாழ்நிகி இருந்தால் அவன் பதிலுக்கு நமக்கு சோறு போடுவான் அவன் கடனும் குறைந்து இருக்கும் வளர்ச்சி தேவை தான் அதை விட முக்கியம் மக்களின் பசி உற்பத்தி இதில் அதிக கவனம் வேண்டும்