dinamalar telegram
Advertisement

38 பேருக்கு கொரோனா

பொள்ளாச்சி:பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் நேற்று, 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.பொள்ளாச்சி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், நேற்று, பொள்ளாச்சி நகரத்தில் ஒன்பது பேர், தெற்கு ஒன்றியத்தில் பத்து பேர், வடக்கு ஒன்றியத்தில் ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.கிணத்துக்கடவு ஒன்றியத்தில் எட்டு பேர், ஆனைமலை ஒன்றியத்தில் மூவர் மற்றும் வால்பாறையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று பாதித்தோரின் வீடுகள் மற்றும் அருகிலுள்ள வீடுகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. தொற்று பாதித்தோரையும், அவர்களுடன் தங்கியிருந்தவர்களையும் சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement