dinamalar telegram
Advertisement

கோவில்களில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு

ADVERTISEMENT
பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளிலுள்ள கோவில்களில் நேற்று, ஆடி பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.ஆடி பவுர்ணமி, திருவோண விரதம் மற்றும் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பொள்ளாச்சி ரயில்வே காலனி பவுர்ணமி நாக கன்னியம்மன் கோவிலில், பல்வேறு திரவியங்கள், பால், தயிர் அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.திப்பம்பட்டி சிவசக்தி அம்மன் உடனமர் மலையாண்டீஸ்வரர், ஆனைமலை சோமேஸ்வரர் கோவிலில் சிறப்பு அலங்காரம், அபிஷேக ஆதாரதனை நடந்தது. கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.* வால்பாறை வாழைத்தோட்டம் காமாட்சி அம்மன் கோவிலில், பவுர்ணமி, அவிட்ட நட்சத்திர நாளான நேற்று, அம்மனுக்கு, பால், இளநீர், திருநீறு, மஞ்சள், குங்குமம், தேன் உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக பூஜை நடந்தது. மதியம், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று மாலை, திருவிளக்கு பூஜை நடந்தது. அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவில், ஈட்டியார் மாரியம்மன், சிறுகுன்றா மகாளியம்மன் கோவில், நடுமலை சந்தனமாரிம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.* உடுமலை மாரியம்மன் கோவிலில், ஆடி மாத பவுர்ணமி விழா நேற்று நடந்தது. இதில், கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.உடுமலை நவநீதகிருஷ்ணர் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில், கருடவாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசபெருமாள் அருள்பாலித்தார்.சின்னபொம்மன்சாளை மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், சுற்றுப்புற கிராமங்களிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


- நிருபர் குழு -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement