ADVERTISEMENT
உடுமலை:உடுமலையில், நாட்டின் 75வது சுதந்திர தினம் அமிர்த பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு தன்னார்வ அமைப்புகள் இணைந்து 75 இடங்களில் 75 நிகழ்வுகளை நடத்தி வருகிறது.அதன் ஒருபகுதியாக, உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், சுற்றுச்சூழல் சங்கத்தின் சார்பாக ஆர்.ஜி.எம்., மெட்ரிக் பள்ளி, ஸ்ரீ விசாலாட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெத்தேல் நர்சரி பள்ளி மற்றும் என்.வி., மெட்ரிக் பள்ளியில் 'கணக்கும் இனிக்கும்' என்ற தலைப்பில் கணிதம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.மாய சதுரங்களை அமைப்பது குறித்து, ஓய்வு பெற்ற ரயில்வே நிலைய மேலாளர் ஜோதிலிங்கம் பேசினார். தன்னார்வலர் பிரபாகரன், அறிவியல் சார்ந்த கேள்விகளுக்கு செயல்விளக்கம் அளித்தார்.தொடர்ந்து பள்ளி மாணவர்கள் இடையே ஓவியம், கட்டுரை, ஸ்லோகம் எழுதுதல் போட்டி உடுமலை தேஜஸ் மஹாலில் நடந்தது. இதில் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.உடுமலை சுற்றுச்சூழல் சங்கத்தலைவர் மணி, செயற்குழு உறுப்பினர் சசிகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இன்று நடக்கும் வான்நோக்கும் நிகழ்வில், இந்தாண்டின் கடைசி சூப்பர் மூன் குறித்து விளக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் செய்து வருகிறார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!