dinamalar telegram
Advertisement

தோட்ட தொழிலாளர்களுக்குதேசியக்கொடி வினியோகம்

ADVERTISEMENT
வால்பாறை:வால்பாறையில், எஸ்டேட் தொழிலாளர்களுக்கு நகராட்சி சார்பில் தேசியக்கொடி வழங்கப்பட்டது.நாட்டின், 75வது சுதந்திர தினத்தை கோலகலமாக கொண்டாடும் வகையில், வீடு தோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்விடுத்துள்ளார்.வரும், 13ம் தேதி முதல், 15ம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து, வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட, 21 வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு நகராட்சி சார்பில் தேசியக்கொடி வழங்கும் பணி தீவிரமாக நடக்கிறது.நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சுதந்திர தினத்தை முன்னிட்டு, அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றி, தேச ஒற்றுமையை வெளிப்படுத்துவதோடு, நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற பெருமையை இந்த உலகிற்கு பறைசாற்றும் வகையில், நாளை (13ம் தேதி) காலை அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும். வரும், 15ம் தேதி வரையிலும் வீடுகளில் தேசியக்கொடியை பறக்க விட வேண்டும்.இவ்வாறு, கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement