dinamalar telegram
Advertisement

துாக்குப்போட்டுபோலீஸ் தற்கொலை

ADVERTISEMENT
பொள்ளாச்சி;பொள்ளாச்சி, கோமங்கலம் அருகே, மனவிரக்தியில் இருந்த இரண்டாம் நிலை காவலர், துாக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.பொள்ளாச்சி, பருத்தியூரை சேர்ந்த திருமூர்த்தி மகன் மணியரசு, 35; கோமங்கலம்புதுார் போலீஸ் ஸ்டேஷனில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு செப்.,1ம் தேதி திருமணம் நடத்த குடும்பத்தினர் திட்டமிட்டிருந்தனர்.திருமணத்தில் விருப்பமில்லை எனக்கூறி மன விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று, கோமங்கலம்புதுார் போலீஸ் குடியிருப்பில், மணியரசு துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.போலீசார் கூறுகையில், 'மணியரசு வேறொரு பெண்ணை காதலித்து வந்த நிலையில், பெற்றோர் பெண் பார்த்து திருமணம் நிச்சயம் செய்துள்ளனர். திருமணத்தில் விருப்பமில்லாமல் மனவிரக்தியில் இருந்தவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்,' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement