dinamalar telegram
Advertisement

மின் மோட்டார்கள் வாங்க விவசாயிகளுக்கு அழைப்பு

உடுமலை:விவசாயிகள் மானியத்திட்டத்தின் கீழ், புதிய மின் மோட்டார்கள் அமைக்கவும், பழைய மின் மோட்டார்களை மாற்றவும் விண்ணப்பிக்கலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் வழங்கும் திட்டத்தின் கீழ், திருப்பூர் மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ், 3 ஏக்கர் நிலம் வைத்துள்ள, சிறு, குறு விவசாயிகள், பாசன நீர் இறைக்க, புதிய மின்மோட்டார், பம்ப் செட்டுகள் வாங்கவும், திறன் குறைந்த பழைய மின் மோட்டார், பம்ப் செட்டுகளை மாற்றி புதிதாக பொருத்தவும், அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ், பயன் பெற விருப்பம் உள்ள விவசாயிகள், சிறு, குறு விவசாய சான்றிதழ், அடங்கல், கிணறு அமைந்துள்ள வரைபடம், மின்சார இணைப்பு அட்டை விபரம் மற்றும் வங்கி புத்தகத்தின் நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும், விபரங்களுக்கு, திருப்பூர் கோட்ட செயற்பொறியாளர், ஜெயகுமார், 94432 43495, அலுவலக உதவி செயற்பொறியாளர் சுப்ரமணியன், 99427 03222, உடுமலை உபகோட்ட உதவி செயற் பொறியாளர் முத்துராமலிங்கம், 98654 97731 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement