dinamalar telegram
Advertisement

கல்லூரியில் வரலாற்று மன்றம் துவக்கம்

ADVERTISEMENT
உடுமலை:உடுமலை, ஜி.வி.ஜி., விசாலாட்சி மகளிர் கல்லுாரியில், வரலாற்றுத் துறை சார்பில் வரலாற்று மன்றம் 'யுவபாரத்' துவக்க நிகழ்ச்சி நடந்தது.கல்லுாரி முதல்வர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். முன்னதாக, வரலாற்றுத்துறை தலைவர் செண்பகவள்ளி வரவேற்றார்.இதில், இளங்கோவன், ராமலிங்கம், முன்னாள் வரலாற்றுத்துறை தலைவர் மீரா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.தொடர்ந்து, மாணவியர் இடையே நாட்டுப்பற்றுடன் செயல்பட வேண்டும், ஊழல் இல்லா சமுதாயம் உருவாக பாடுபட வேண்டும் என பேசினர்.தவிர, மாணவியர் ஐந்து குழுக்களாகப்பிரிந்து, கொங்கு, சோழ, சேர, பாண்டிய, தொண்டை நாடுகளின் முத்திரை மற்றும் சிறப்பினை குறும் படங்களாக நிகழ்த்திக்காட்டினர். மாணவி சுவர்ணமுகி நன்றி கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement