dinamalar telegram
Advertisement

ஆவணி அவிட்டத்தில் பூணுால் மாற்றும் நிகழ்ச்சி

ADVERTISEMENT
பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஆனைமலையில், ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, மடங்கள், கோவில்களில் பூணுால் மாற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.ஆவணி மாத அவிட்ட நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமியான நேற்று, ஆவணி அவிட்ட விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் இவ்விழாவில், உபநயனம் செய்துள்ள பிராமணர்கள், பூணுால் மாற்றுவது முக்கிய நிகழ்வாக உள்ளது. அதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சியில், பிராமணர்கள் நிர்வகிக்கும் சங்கர மடத்தில் இவ்விழா நேற்று நடந்தது. மொத்தம், மூன்று குழுக்களாக, 200 பேர் பூணுால் மாற்றினர். இந்நிகழ்ச்சியில், முன்னோர் வழிபாடு, காயத்திரி ஜபம் நடந்தது.கடைவீதி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், பூணுால் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. ஆனைமலை ஈஸ்வரன் கோவிலில், பிராமணர் உள்ளிட்ட, பூணுால் அணிவோர், நேற்று, பூணுாலை அகற்றி, புது பூணுாலை மாற்றிக்கொண்டனர். கோவில்களிலும், மடங்களிலும் இந்நிகழ்ச்சி நடந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement