dinamalar telegram
Advertisement

நவீனங்கள் அணிவகுக்கும்நிட் ஷோ இன்று துவக்கம்

ADVERTISEMENT
திருப்பூர்:உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்பிலான அதிநவீன பின்னலாடை இயந்திரங்களுடன் 'நிட் ஷோ' கண்காட்சி, திருப்பூரில் இன்று துவங்குகிறது.இந்திய பின்னலாடை உற்பத்தி துறையினரின் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு கைகொடுத்துவரும் 'நிட் ஷோ' கண்காட்சி, திருப்பூர் - காங்கயம் ரோடு மணி மஹால் அருகே டாப்லைட் வளாகத்தில் இன்று துவங்குகிறது. காலை, 10:00 மணிக்கு துவங்க உள்ள நிகழ்ச்சியில், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன், இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம், 'நிட்மா' தலைவர் ரத்தினசாமி, 'டெக்பா' தலைவர் ஸ்ரீகாந்த், 'டீமா' தலைவர் முத்துரத்தினம் உட்பட பின்னலாடை உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.ஆறு அரங்குகள், 400க்கும் மேற்பட்ட ஸ்டால்களில், உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள், அதிநவீன ஆடை உற்பத்தி இயந்திரங்களை இடம்பெறச் செய்கின்றன.'நிட்ஷோ' கண்காட்சி நிர்வாக இயக்குனர் கிருஷ்ணா கூறியதாவது:இருபதாவது 'நிட்ஷோ' கண்காட்சி திருப்பூரில் துவங்கியுள்ளது. ஜெர்மனி, ஜப்பான், சீனா, கொரியா, துருக்கி போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள்; திருப்பூர், கோவை, லுாதியானா போன்ற உள்நாட்டு நிறுவனங்கள் தயாரிப்பிலான ஆடை உற்பத்தி மெஷின்கள் காட்சிப்படுத்தப்படுகிறது.நிட்டிங், டையிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி, கட்டிங், தையல் உட்பட பின்னலாடை உற்பத்தி துறைசார்ந்த அனைத்து அதிநவீன மெஷினரிகள்; நுால், துணி ரகங்கள், உதிரி பாகங்கள் இடம்பெறுகின்றன. நாட்டின் மிகப்பெரிய பிரின்டிங் கண்காட்சியாக இது அமையும். உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த 30 பிரபல பிரின்டிங் மெஷின் உற்பத்தி நிறுவனங்கள், நவீன ரக பிரின்டிங் மெஷின்கள் முழு இயக்க நிலையில் வைக்கப்படுகின்றன.வெளிநாடுகளிலிருந்து மெஷின்களை இறக்குமதி செய்து சந்தைப்படுத்தி வந்த பல உள்ளூர் நிறுவனங்கள், சொந்த பிராண்ட் மெஷின்களை கண்காட்சியில் அறிமுகப்படுத்துவது கூடுதல் சிறப்பு. சர்வதேச தொழில்நுட்பங்களுடன், மிக அருகாமையில் நடத்தப்படும் 'நிட்ஷோ' கண்காட்சியை, அனைத்து பின்னலாடை உற்பத்தியாளர்களும் தவறாமல் பார்வையிடவேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.இன்று துவங்கும் கண்காட்சி வரும் 14ம் தேதி வரை நடக்கிறது. காலை 10:00 முதல் இரவு, 7:00 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement