Advertisement

சிவகளை அகழாய்வில் தங்க அணிகலன்

ADVERTISEMENT
திருநெல்வேலி:தூத்துக்குடி மாவட்டம் சிவகளை தொல்லியல் அகழாய்வில் நேற்று தங்க அணிகலன் கிடைத்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி கரையில் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறையினரும், கொற்கை உள்ளிட்ட இடங்களில் தமிழக தொல்லியல் துறையினரும் அகழாய்வு செய்து வருகின்றனர்.சிவகளை பரம்பு, ஸ்ரீ மூலக்கரை , ஸ்ரீபராக்கிரமபாண்டி திரடு, பொட்டல் கோட்டை திரடு ஆகிய இடங்களில் அகழாய்வு நடக்கிறது.

பராக்கிரம் பாண்டி திரடுபகுதியில் நடந்த அகழாய்வில் தங்கத்தால் ஆன அணிகலன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதன் பயன்பாடு தெரியவில்லை. ஏற்கனவே இதே பகுதியில் சுடுமண் வட்ட சில்கள், தக்களை , புகைப்பான், ஆட்ட காய்கள், பாசி மணிகள், காதணிகள், எலும்பிலான கூர்முனை கருவிகள், முத்திரைகள் உட்பட 80 தொழிற் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.திருநெல்வேலி மாவட்டம் நம்பியாற்றுப்படுகையில் வள்ளியூர் அருகே துலுக்கர்பட்டியில் நடந்துவரும் அகழாய்வில் பழமையான மண்குடுவை, ஓடு, பாசி போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement