dinamalar telegram
Advertisement

2 ஆண்டுகளில் 15 பேர் பலி மீனவர்கள் திடீர் போராட்டம்

நாகர்கோவில்:தேங்காப்பட்டணத்தில், கடலில் மீன் பிடித்து திரும்பிய படகு, துறைமுக முகத்துவாரத்தில் கவிழ்ந்ததில், மீனவர் சைமன் இறந்ததை தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளில், இங்கு இறந்தவர்கள் எண்ணிக்கை, 15 ஆக உயர்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், தேங்காப்பட்டணத்தில் உள்ள அரசின் துறைமுகத்தை, 25க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், மீன்பிடி தொழிலுக்காக பயன்படுத்தி வருகின்றனர். இத்துறைமுகத்தில், அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை மீன் பிடித்து திரும்பிய பைபர் படகு, முகத்துவார அலையில் சிக்கி கவிழ்ந்ததில், பூத்துறையை சேர்ந்த சைமன், 48, இறந்தார்.

இரண்டு ஆண்டுகளில், இங்கு இறந்தவர்கள் எண்ணிக்கை, 15 ஆக உயர்ந்துள்ளது. முகத்துவாரத்தில் உள்ள தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய வேண்டும் என, மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில், நேற்று அங்கு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement