dinamalar telegram
Advertisement

அரிவாளுடன் வெட்ட துரத்திய கவுன்சிலர் கணவரால் பரபரப்பு

திருச்சி:மண்ணச்சநல்லுார் அருகே, பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில், சிலரை தகாத வார்த்தைகளால் திட்டி, அரிவாளால் வெட்ட துரத்திய, தி.மு.க., ஒன்றிய கவுன்சிலரின் கணவர் மீது, போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் அருகே உள்ள, தளுதாளப்பட்டி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் நித்யா. தி.மு.க.,வைச் சேர்ந்த இவரது கணவன் வெற்றிச்செல்வன், 47.அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ள வெற்றிச்செல்வனுக்கும், அதே பகுதி குணசேகரன் உள்ளிட்ட சிலருக்கும், நிலம் விற்பனை தொடர்பாக முன் விரோதம் இருந்துள்ளது.

நேற்று முன்தினம், கடைக்கு சென்ற குணசேகரன் தரப்பினர், மது போதையில் இருந்த வெற்றிச்செல்வனிடம், வாய் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.ஆத்திரமடைந்த வெற்றிச்செல்வன், குணசேகரன் தரப்பினரை தகாத வார்த்தைகளால் திட்டி, கடையில் வைத்திருந்த அரிவாளை எடுத்து, துரத்தித் துரத்தி வெட்ட முயன்றார்.
பட்டப்பகலில், பொதுமக்கள் நடமாட்டம் உள்ள சாலையில், ஒன்றிய கவுன்சிலரின் கணவர், சிலரை அரிவாளுடன் துரத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.இந்த சம்பவம் தொடர்பாக, சிறுகனுார் போலீசார், வெற்றிச்செல்வன் மீது, இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement