dinamalar telegram
Advertisement

சரக்கு ரயிலில் தீ விபத்து நடுவழியில் நிறுத்தம்

நாகர்கோவில்:நாகர்கோவில் அருகே நேற்று காலை ஓடிக்கொண்டிருந்த டீசல் சரக்கு ரயிலின் சக்கரத்தில் இருந்து தீப்பொறி எழுந்ததால் நடுவழியில் ரயில் நிறுத்தப்பட்டது.
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து பெட்ரோல் , டீசல் ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் 87 வேகன்களுடன் திருநெல்வேலி சென்று கொண்டிருந்தது. நேற்று காலை 9:15 மணிக்கு நாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலம் அருகே வந்த போது ஏழாவது வேகனில் உள்ள சக்கரங்கள் பழுதாகி தண்டவாளத்தில் உரசியபடி சென்றது.

இதனால் சக்கரத்தில் இருந்து தீப்பொறி எழும்புவதை பார்த்த பின்பக்கத்தில் இருந்த ரயில்வே ஊழியர் வாக்கி டாக்கி மூலம் டிரைவருக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக அங்கு ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர் டிரைவர்களும், ஊழியர்களும் பழுதை சரி செய்ததால் 20 நிமிடத்திற்கு பின்னர் ரயில் புறப்பட்டு சென்றது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement