dinamalar telegram
Advertisement

தேங்காய்பட்டணம் துறைமுகத்தில் நேற்றும் ஒரு மீனவர் பலி:* தொழில்நுட்ப குறைபாடு காரணமா

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணத்தில் கடலில் மீன் பிடித்து திரும்பிய படகு துறைமுக முகதுவாரத்தில் கவிழ்ந்ததில் மீனவர் சைமன் 48, இறந்ததை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளில் இங்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணத்தில் அரசின் துறைமுகத்தை 25க்கும் மேற்பட்ட கிராம மீனவர்கள் மீன் பிடி தொழிலுக்காக பயன்படுத்தி வருகின்றனர். இத் துறைமுகத்தில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலையில் மீன்பிடித்து திரும்பிய பைபர் படகு முகதுவாரத்தில் அலையில் சிக்கி கவிழ்ந்ததில் பூத்துறையை சேர்ந்த சைமன் 48, இறந்தார்.

இவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இரண்டு ஆண்டுக்குள் இவருடன் இங்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. முகதுவாரத்தில் உள்ள தொழில் நுட்ப கோளாறை சரி செய்ய வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் நேற்று அங்கு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement